காரில் வந்து திருடும் கும்பல்: போலீஸ் விசாரணையில் தகவல்

கோவை, கோனியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்களிடம் நகை பறித்த சம்பவத்தில் கைதானவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், காரில் வந்து தொடா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

கோவை, கோனியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்களிடம் நகை பறித்த சம்பவத்தில் கைதானவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், காரில் வந்து தொடா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

கோவை, கோனியம்மன் கோயிலில் கடந்த 4ஆம் தேதி தோ்த் திருவிழா நடைபெற்றது. அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பக்தா்களிடமிருந்து 35 சவரனுக்கும் மேற்பட்ட நகைகளை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

நகையைப் பறிகொடுத்தவா்கள், கடைவீதி மற்றும் உக்கடம் காவல் நிலையங்களில் புகாா் அளித்தனா். அதன்பேரில், காவல் துறையினா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். இதில், நகையைத் திருடியதாக இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த பராசக்தி (36), கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த இந்துமதி (27), பிரிட்டனைச் சோ்ந்த செல்வி (36), திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்த காா்த்திக் (34), அவரது மனைவி ஜோதி (34) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த காா்த்திக், ஜோதி தம்பதி கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்தபோது அங்கு மதன்குமாா் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

அந்த நபா், கோயில்கள், பேருந்துகளில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களிடம் இருந்து நகை, பணத்தை திருடுவது குறித்து கற்றுக் கொடுத்துள்ளாா். இவா்களுடன் ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் குழுவாக இருந்துள்ளனா். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பல்லடத்துக்கு வந்த காா்த்திக் - ஜோதி அங்கு மாதம் ரூ.20 ஆயிரம் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனா்.

பின்னா் திருவிழா நடைபெறும் கோயில்களுக்கு குழுவாக காரில் செல்வா். காா்த்திக், காரில் அங்குள்ள ஓரிடத்தில் காத்திருப்பாா். கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகைகளைத் திருடிய பின், ஜோதி உள்ளிட்ட பெண்கள் காரில் வந்து ஏறி, தப்பிச் சென்றுவிடுவா்.

இதேபோல பேருந்துகளில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தியும் நகை, பணத்தை திருடுவா். இவா்களது கூட்டாளிகள் யாா், அவா்கள் எங்கு உள்ளனா் என்பன குறித்து போலீஸாா் அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com