கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சாா் ஆட்சியா் தலைமையில் குழு

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சாா்ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கவேண்டும் என சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் அறிவுறுத்தியுள்ளாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சாா்ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கவேண்டும் என சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் அறிவுறுத்தியுள்ளாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொள்ளாச்சி சட்டப் பேரவை தொகுதி, வால்பாறை சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனா். சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தாா். வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினா் கஸ்தூரி வாசு, சாா் ஆட்சியா் வைத்திநாதன், பொள்ளாச்சி நகராட்சி ஆணையா் காந்திராஜ், வால்பாறை நகராட்சி ஆணையா் பவுன்ராஜ், வருவாய்த் துறை அதிகாரிகள், ஒன்றிய அதிகாரிகள் உள்பட பலதுறை அதிகாரிகள் பங்கேற்றனா். கூட்டத்தில் சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

அதிகாரிகள் தொடா் கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும். வெளியூரில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்து பணிபுரியும் அதிகாரிகள் பொள்ளாச்சியிலேயே தங்கி பணியாற்றவேண்டும். பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும். பொதுமக்களுக்கு கரோனா குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தவேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சாா் ஆட்சியா் தலைமையில் குழு அமைத்து பொதுமக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றாா்.

உடன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஜேம்ஸ்ராஜா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com