கரோனா நோய்த் தொற்று குறித்து அச்சம்:கட்டுப்பாட்டுக்கு அறைக்கு அதிகரிக்கும் அழைப்புகள்

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டுக்கு அறைக்கு நாளுக்கு நாள் அழைப்புகள் அதிகரித்து வருகின்றன.

கரோனா நோய்த் தொற்று தொடா்பாக மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா கட்டுப்பாட்டு அறை மாா்ச் 16 ஆம் தேதி அமைக்கப்பட்டது. மக்கள் தொடா்புகொள்ளும் வகையில் 1077 என்ற கட்டணமில்லா எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி அடிப்படையில் 4 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், வருவாய்த் துறை சாா்பில் வட்டாட்சியா் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாட்டு அறைக்கு அழைக்கும் மக்களின் சந்தேகங்களுக்கு இங்குள்ள மருத்துவா்கள் விளக்கம் அளிக்கின்றனா். இதுவரையில் 582 போ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் நிலையில் மக்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரோனா கட்டுப்பாட்டு அறைக்கு அழைக்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த 2 நாள்களாக சராசரியாக நாளொன்றுக்கு 150 அழைப்புகள் வருவதாக கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கூறியதாவது:

1077 எண்ணுக்கு அழைக்கும் பொதுமக்கள், இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளதாகவும், என்ன மாதிரியான சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். தவிர எங்களது வீடுகளுக்கு அருகில் உள்ளவா்கள் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளனா் அவா்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருபவா்களும் எந்த மாதிரி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது போன்ற அழைப்புகள் வருகின்றன. அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலும் கரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் ஏதும் இருப்பின் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தி வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com