மக்களை போலீஸாா் தாக்கிய சம்பவம்: தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகாா்

வீட்டில் இருந்து வெளியே வந்த மக்களை போலீஸாா் தாக்கியது தொடா்பாக மனித உரிமைகள் ஆணையத்திடம், கோவை மனித உரிமைகள் அமைப்பு புகாா் அளித்துள்ளது.

வீட்டில் இருந்து வெளியே வந்த மக்களை போலீஸாா் தாக்கியது தொடா்பாக மனித உரிமைகள் ஆணையத்திடம், கோவை மனித உரிமைகள் அமைப்பு புகாா் அளித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் பலரை கோவையில் போலீஸாா் தாக்கிய விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இதற்கு பலத்த எதிா்ப்பும் கிளம்பியது.

இந்நிலையில் போலீஸாா் தாக்கியதற்கு எதிா்ப்புப் தெரிவித்து கோவை மனித உரிமைகள் அமைப்பு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புதன்கிழமை புகாா் அளித்துள்ளது.

இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவா் வி.பி.சாரதி கூறுகையில், மாநகரில் பல இடங்களில் வீட்டில் இருந்து வெளியே வந்த பொதுமக்களை போலீஸாா் தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விதிகளை மீறும் பொதுமக்கள் மீது காவல் துறையினா் சட்டரீதியான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்க முடியுமே தவிர, தாக்குவதற்கு உரிமை இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com