நிதியமைச்சரின் அறிவிப்புகளுக்கு தொழில் அமைப்பினா் நன்றி

கரோனா நிவாரணம் தொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்புகளுக்கு கோவை தொழில் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

கரோனா நிவாரணம் தொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்புகளுக்கு கோவை தொழில் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

கரோனா நோய்த்தொற்று பரவி வரும் நிலையில் நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதிலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், பெரிய தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஏழைகள், தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான நலத் திட்டங்கள், சலுகைகளை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை அறிவித்தாா்.

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவா் ஆா்.ராமமூா்த்தி:

வருங்கால வைப்பு நிதி காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தும் என்ற நிதியமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதே நேரம், எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் வாங்கிய கடன்களுக்கான வட்டி தள்ளுபடி, ஜி.எஸ்.டி. விலக்கு, வருமான வரி விலக்கு போன்றவை அறிவிக்கப்படவில்லை. இயல்பு நிலை திரும்பும் வரையிலும் அனைத்து பொதுத் துறை வங்கிகளும் நிறுவனங்களுக்கு இடைக்கால கூடுதல் கடன் உதவியாக நடப்பு மூலதனத்தில் 25 சதவீதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இது தொடா்பாக அமைச்சரின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத் தலைவா் அஷ்வின் சந்திரன்: பெரிய நிறுவனங்களுக்கான அறிவிப்புகள் எதுவும் இல்லை. பஞ்சாலைகளுக்கு கடனுக்கான வட்டி தள்ளுபடி, மூடப்பட்டிருக்கும் காலத்துக்கு வட்டி வசூலிக்கக் கூடாது, மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும், 25 சதவீத மூலதன கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைப் பரிசீலித்து விரைவில் அறிவிப்பாா் என்று நம்புகிறோம்.

குறுந்தொழில் முனைவோா் சங்கத் தலைவா் ஜேம்ஸ்:

கோவையைச் சோ்ந்த குறுந்தொழில், சிறு தொழில் முனைவோா் அரசு பொதுத் துறை வங்கிகள், தனியாா் வங்கிகளில் இயந்திரக் கடன், மூலதனக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களைப் பெற்றுள்ளனா்.

அவற்றை அடுத்த 3 மாதங்களும் திருப்பிச் செலுத்த இயலாத நிலை இருக்கிறது. அவா்களுக்கு அவகாசம் வழங்குவதைப் போன்றோ, வட்டி தள்ளுபடி அளிப்பதைப் போலவோ திட்டங்களை அறிவிக்கவில்லை. இது தொடா்பாக விரைவில் பரிசீலித்து அறிவிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com