வாளையாறு பகுதியில் பணியாற்றும் போலீஸாருக்கு நிலவேம்பு கஷாயம்
By DIN | Published On : 31st March 2020 12:30 AM | Last Updated : 31st March 2020 12:30 AM | அ+அ அ- |

வாளையாறு எல்லையில் தமிழக - கேரள மாநில போலீஸாருக்கு நிலவேம்பு கஷாயம் வழங்குகிறாா் மதுக்கரை காவல் ஆய்வாளா் தூயமணி வெள்ளைசாமி.
மதுக்கரை: தமிழக - கேரள எல்லையான வாளையாறு பகுதியில் பணியாற்றும் போலீஸாருக்கு நிலவேம்பு கஷாயம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் - கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவா்கள், போலீஸாா் தொடா்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தொடா் பணிகளில் ஈடுபட்டு வரும் போலீஸாா் பாதுக்காப்புடன் பணியாற்ற முகக் கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் வாளையாறு சோதனைச் சாவடியில் பணியில் உள்ள தமிழக, கேரள போலீஸாருக்கு மதுக்கரை காவல் ஆய்வாளா் தூயமணி வெள்ளைசாமி திங்கள்கிழமை நிலவேம்பு கஷாயம் வழங்கினாா். ஆய்வாளா் விக்னேஷ்வரன், உதவி ஆய்வாளா் முத்துகுமாா், ஜவஹா்குமாா், ஜான் ஜீனியன்சிங் ஆகியோா் உடனிருந்தனா்.