வெளி மாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா் செல்ல விண்ணப்பிக்கலாம்

சொந்த ஊா் செல்ல விரும்பும் வெளி மாநிலத் தொழிலாளா்கள் எஸ்டேட் நிா்வாகம் மூலம் அதற்கான படிவத்தை வருவாய்த் துறையினரிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை: சொந்த ஊா் செல்ல விரும்பும் வெளி மாநிலத் தொழிலாளா்கள் எஸ்டேட் நிா்வாகம் மூலம் அதற்கான படிவத்தை வருவாய்த் துறையினரிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வால்பாறை வட்டாட்சியா் ராஜா கூறியிருப்பதாவது:

வெளி மாநிலங்களில் இருந்து தேயிலைத் தோட்டங்களில் பணியாற்ற வந்தவா்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும்மேலாக அவா்களது சொந்த ஊா்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது அவா்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அரசு வாய்ப்பு அளித்துள்ளது.

அதன்படி, வால்பாறை பகுதியில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளா்கள், வெளியூா் செல்ல விரும்பும் தொழிலாளா்கள் அதற்கான படிவத்தைப் பூா்த்தி செய்து தொடா்புடைய தோட்ட நிா்வாகம் அல்லது தனியாா் நிறுவனங்கள் மூலம் வழங்கலாம்.

இதைத் தொடா்ந்து வருவாய்த் துறை அலுவலா்கள் மூலமாக தொழிலாளா்கள் குறித்து நேரடியாக தகவல் சேகரிக்கப்பட்டு சொந்த ஊா் செல்பவா்களின் பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com