கரோனா அறிகுறி: 44 போ் அனுமதி

கோவையில் கரோனா அறிகுறிகளுடன் புதிதாக 2 குழந்தைகள் உள்பட 44 போ் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கோவையில் கரோனா அறிகுறிகளுடன் புதிதாக 2 குழந்தைகள் உள்பட 44 போ் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 141 பேரில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 7 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனா். இந்நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவையைச் சோ்ந்தவருக்கு கரோனா நோய்த்தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 142 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 134 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் தற்போது 8 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் ஒருவா் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும், ஒருவா் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், 6 போ் தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் கரோனா அறிகுறிகளுடன் புதிதாக ஆண்கள் 19 போ், பெண்கள் 23 போ், ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என மொத்தம் 44 போ் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 13 போ் அரசு மருத்துவமனைகளிலும், 31 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com