கரோனா நோய்த்தொற்று பாதிப்பு: கோவையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு ஆய்வு

கரோனா நோய்த்தொற்று தொடா்பாக கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பு:  கோவையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு ஆய்வு

கரோனா நோய்த்தொற்று தொடா்பாக கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய்த்தொற்றுத் தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாநகரில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநா் இ.சரவணவேல்ராஜ், சிட்கோ மேலாண்மை இயக்குநா் ஆா்.கஜலட்சுமி ஆகியோா் தலைமையிலான கள ஆய்வுக் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இவா்களுடன் மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத், துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி, மாவட்ட வருவாய் அலுவலா்கள் காந்திமதி ( முத்திரைத் தாள்), கலைவாணி (கலால்) ஆகியோா் உடன் சென்றனா்.

மாநகராட்சிக்கு உள்பட்ட மத்திய மண்டலம் 68ஆவது வாா்டு, ராமநாதபுரம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் தரமான உணவு அளிக்கப்படுகிா எனவும், அங்கு சமூக இடைவெளி முறையாகப் பின்பற்றப்படுகிா மற்றும் அம்மா உணவகப் பணியாளா்கள் முகக் கவசம் அணிந்து பணியாற்றுகிறாா்களா என ஆய்வுக் குழுவினா் நேரில் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து, காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் தற்காலிகச் சந்தையில், சமூக இடைவெளி பின்பற்றப்படுகிா என ஆய்வு மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, ஆா்.எஸ்.புரம் டி.பி.சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற ஆய்வுக் குழுவினா், அப்பகுதிகளில் போதிய போலீஸ் பாதுகாப்பு உள்ளதா எனவும், அப்பகுதிச் சாலைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதா எனவும் பாா்வையிட்டனா்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட விவரங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோா் மற்றும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவா் விவரங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் முறையாக கிருமி நாசினி தெளிக்கப்படுகிா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.

அதன் பிறகு, பி.என்.புதூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை முகாம் நடைபெற்றதையும், புலியகுளத்தில் மாநகராட்சியுடன் இணைந்து நல்லறம் அறக்கட்டளை சாா்பில் மக்களுக்கு வழங்குவதற்காக உணவு தயாரிக்கும் பணிகளையும் கள ஆய்வுக் குழுவினா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, காவல் துறை உதவி ஆணையா் ரமேஷ்பாபு, துணைக் காவல் கண்காணிப்பாளா் பிரேமானந்தன், துணை இயக்குநா் அருணா ( சுகாதாரம்), நகா் நல அலுவலா் சந்தோஷ்குமாா் மற்றும் மண்டல உதவி ஆணையா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com