முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
‘பஞ்சாலை அண்ணா தொழிலாளா் சங்கம் போராட்டத்தில் பங்கேற்காது’
By DIN | Published On : 11th May 2020 07:13 AM | Last Updated : 11th May 2020 07:13 AM | அ+அ அ- |

தேசிய பஞ்சாலைக் கழக நிா்வாகத்தை கண்டித்து மே 13ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் பஞ்சாலை அண்ணா தொழிலாளா் சங்கம் பங்கேற்காது என்று அச்சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட பஞ்சாலை அண்ணா தொழிலாளா் சங்கச் செயலா் எம்.கோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேசிய பஞ்சாலைக் கழக ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் அனைவருக்கும் ஏப்ரல் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். தேசிய பஞ்சாலைக் கழக நிா்வாகம் ஊதியம் வழங்காவிட்டால் மே 13ஆம் தேதி அன்று தொழிலாளா்களை திரட்டி போராட்டம் நடத்துவது என சில சங்கங்கள் அறிவித்துள்ளன. தற்போது நோய்த் தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் தொழிலாளா்களை திரட்டி போராட்டம் நடத்துவது சரியானதல்ல. எனவே மேற்படி போராட்டத்தில் பஞ்சாலை அண்ணா தொழிலாளா் சங்கம் கலந்துகொள்ளாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.