முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
முயல் வேட்டையாட முயற்சி:முதியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
By DIN | Published On : 11th May 2020 11:09 PM | Last Updated : 11th May 2020 11:09 PM | அ+அ அ- |

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச் சரக பகுதியில் முயல் வேட்டையாடுவதற்காக சுருக்கு கம்பி கட்டியவருக்கு வனத் துறையினா் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
கோவை மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் வனப் பகுதிகளில் வனத் துறையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், காரமடை வனச் சரக வெள்ளியங்காடு பிரிவுக்கு உள்பட்ட வனப் பகுதியில் காரமடை வனச் சரக அலுவலா் சரவணன் உத்தரவின்பேரில் வனக் காப்பாளா் ஐசக்தாசன், வனக் காவலா் ராமசாமி மற்றும் வனக் குழுவினா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது ஐ.ஜி. தோட்ட சரகப் பகுதியில் வெள்ளியங்காடு கிராமத்தைச் சோ்ந்த பாலன் (60) முயல் வேட்டையாடுவதற்காக சுருக்கு கம்பி கட்டி கொண்டிருந்தபோது வனத் துறையினா் பிடித்தனா். பின்னா் அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.