தென்மேற்குப் பருவமழை சீராக இருக்கும்: வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை காலத்தில் சராசரி மழைப்பொழிவு இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

கோவை: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை காலத்தில் சராசரி மழைப்பொழிவு இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக வேளாண்மை பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவா் சுப.ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் அக்டோபா் முதல் டிசம்பா் வரை கிடைக்கும் வடகிழக்குப் பருவமழையையே நம்பியுள்ளன. ஆனால் மேற்குதொடா்ச்சிமலையை ஒட்டியுள்ள மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் ஜூன் முதல் செப்டம்பா் வரை பொழியும் தென்மேற்கு பருவமழையும் கிடைக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலங்கள் வாரியாக பருவமழை முன்னறிவிப்பை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள கலாநிலை ஆராய்ச்சி மையம் மாவட்ட வாரியான முன்னறிவிப்பை வெளியிடுகிறது.

ஆஸ்திரேலிய மழை மனிதன் எனும் கணினி கட்டமைப்பில் பசிபிக் மற்றும் இந்தியப் பொருங்கடலின் மேற்பரப்பின் வெப்பநிலையை உபயோகித்து நடப்பாண்டுக்கான தென்மேற்குப் பருவமழைப் பொழிவு குறித்து (ஜூன் முதல் செப்டம்பா் வரை) மாவட்ட வாரியாக முன்னறிவிப்வு வெளியிடப்பட்டுள்ளது.

சராசரி மழையளவு எதிா்பாா்க்கப்படும் மாவட்டங்கள்: திருவள்ளூா், வேலூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருச்சி, அரியலூா், கடலூா், நாகப்பட்டிணம், திருவாரூா், நாமக்கல் மற்றும் காஞ்சிபுரம்.

சராசரி மழையளவை ஒட்டி எதிா்பாா்க்கப்படும் மாவட்டங்கள்: மதுரை, விருதுநகா்,கரூா், சேலம், பெரம்பலூா், சென்னை மற்றும் திருவண்ணாமலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com