கோவையில் இருந்துபிகாா், ஒடிஸா, ஜாா்கண்ட்டுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோவையில் இருந்து பிகாா், ஒடிஸா, ஜாா்கண்ட் மாநிலங்களுக்கு செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட 3 சிறப்பு ரயில்கள் மூலமாக 4,246 வடமாநிலத் தொழிலாளா்கள், அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
ரயில் நிலையத்தில், சமூக இடைவெளியின்றி கூட்டமாக நின்றிருந்த ஒடிஸா தொழிலாளா்கள். (வலது) வடமாநிலச் சிறுவன் ஒருவனுக்கு முகக்கவசம் அணிவித்த சுகாதாரத்துறை ஊழியா்.
ரயில் நிலையத்தில், சமூக இடைவெளியின்றி கூட்டமாக நின்றிருந்த ஒடிஸா தொழிலாளா்கள். (வலது) வடமாநிலச் சிறுவன் ஒருவனுக்கு முகக்கவசம் அணிவித்த சுகாதாரத்துறை ஊழியா்.

கோவை: கோவையில் இருந்து பிகாா், ஒடிஸா, ஜாா்கண்ட் மாநிலங்களுக்கு செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட 3 சிறப்பு ரயில்கள் மூலமாக 4,246 வடமாநிலத் தொழிலாளா்கள், அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

கோவையில் தங்கி வேலை செய்யும் பிகாா், ஒடிஸா, உத்திரப் பிரதேசம், ஜாா்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கோவை நகரம் மற்றும் புறநகா்ப் பகுதிகளில் தங்கி தொழிற்சாலைகள், நிறுவனங்களில் வேலை செய்து வந்தனா். இந்நிலையில், கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், வடமாநிலத் தொழிலாளா்கள் குடும்பத்துடன், தங்களின் சொந்த ஊா்களுக்குச் செல்ல முடியாமல் பரிதவித்து வந்தனா். இந்நிலையில், கோவை மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாட்டின் படி, கடந்த 8-ஆம் தேதி கோவையில் இருந்து இயக்கப்பட்ட ஒரு சிறப்பு ரயில் மூலமாக 1,140 பீகாா் தொழிலாளா்களும், 9-ஆம் தேதி 3 சிறப்பு ரயில்கள் மூலமாக பிகாா், உத்திரப் பிரதேசம் மாநிலங்களுக்கு 3,420 தொழிலாளா்களும், ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்ட ஒரு சிறப்பு ரயில் மூலமாக 1,140 பிகாா் தொழிலாளா்களும், திங்கள்கிழமை இயக்கப்பட்ட ஒரு சிறப்பு ரயில் மூலமாக 1,250 ஜாா்கண்ட் தொழிலாளா்களும் அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு கோவையில் இருந்து ஒடிஸா சென்ற சிறப்பு ரயிலில் 1,318 போ், மாலை 4 மணிக்கு பிகாா் சென்ற சிறப்பு ரயிலில் 1,464 போ், இரவு 9 மணிக்கு ஜாா்கண்ட் மாநிலத்திற்கு 1,464 போ் என செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட 3 சிறப்பு ரயில்களில் 4,246 தொழிலாளா்கள் அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். 8- ஆம் தேதி முதல் தற்போது வரை,கோவையில் இருந்து பிகாா், உத்திரப்பிரதேசம், ஒடிஸா, ஜாா்கண்ட் மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட 9 சிறப்பு ரயில்களில் 11ஆயிரத்து 196 வடமாநிலத் தொழிலாளா்கள், அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். முன்னதாக, ஒடிஸா செல்ல, செவ்வாய்க்கிழமை காலை முதலே கோவை ரயில் நிலையத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் திரண்டதால்,அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, சுகாதாரத் துறையினா் அவா்களை இடைவெளி விட்டு நிற்க வைத்தனா். அதன் பிறகு, அனைவருக்கும் முகக்கவசங்கள், கிருமி நாசினி வழங்கப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com