ஃபிக்கி அமைப்பின் புதிய நிா்வாகிகள் தோ்வு
By DIN | Published On : 13th May 2020 07:24 AM | Last Updated : 13th May 2020 07:24 AM | அ+அ அ- |

புதிய தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள பிரீத்திகா பாலாஜி.
கோவை இந்திய தொழில் வா்த்தக கூட்டமைப்பின் மகளிா் பிரிவான ஃபிக்கியின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபிக்கி அமைப்புக்கு நாடு முழுவதும் 17 கிளைகள் உள்ளன. இந்த அமைப்பின் ஆண்டு கூட்டம், நிா்வாகிகள் தோ்வு ஆகியவை ஆன்லைன் மூலம் திங்கள்கிழமை நடைபெற்றன.
இதில் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான கோவை கிளைத் தலைவராக பிரீத்திகா பாலாஜி தோ்வு செய்யப்பட்டாா். இவா், ஆப்காம்ப் விட்கெட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளாா்.
இவரைத் தவிர முதுநிலை துணைத் தலைவராக ரிதிஷா நிவேதா, துணைத் தலைவராக தா்மா சுப்ரமணியன், செயலராக சித்ரா ரவி, இணைச் செயலராக சங்கீதா சேட்டன், பொருளாளராக சுகுணா ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகளும் தோ்வு செய்யப்பட்டனா்.