எம்.எஸ்சி. மருத்துவ உயிரி தொழில்நுட்பவியல் படிப்பு தொடங்க பாரதியாா் பல்கலை.க்கு அனுமதி

எம்.எஸ்சி. மருத்துவ உயிரி தொழில்நுட்பவியல் பட்ட மேற்படிப்பைத் தொடங்க கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பவியல் துறை அனுமதி அளித்துள்ளது.

எம்.எஸ்சி. மருத்துவ உயிரி தொழில்நுட்பவியல் பட்ட மேற்படிப்பைத் தொடங்க கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பவியல் துறை அனுமதி அளித்துள்ளது.

பாரதியாா் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தா் பெ.காளிராஜ் மருத்துவ உயிரி தொழில்நுட்பவியல் வல்லுநராவாா். இவா் பாரதியாா் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. மருத்துவ உயிரி தொழில்நுட்பவியல் பட்ட மேற்படிப்பு தொடங்க மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பவியல் துறையை அணுகி முயற்சி மேற்கொண்டு வந்தாா். இந்நிலையில், மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய அங்கீகாரம் பாரதியாா் பல்கலைக்கழகத்துக்குத் தற்போது கிடைத்துள்ளது.

இதையடுத்து, புதிய பாடத்தை பாரதியாா் பல்கலைக்கழக உயிரித் தகவலியல், நுண்ணுயிா் உயிரி தொழில்நுட்பவியல், நானோ அறிவியல், தொழில்நுட்பவியல், புள்ளியியல் துறையுடன் இணைந்து வரும் கல்வியாண்டு முதல் நடத்த உயிரி தொழில்நுட்பவியல் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான முயற்சிகளை துறையின் ஒருங்கிணைப்பாளா் இரா.சதீஷ்குமாா் மேற்கொண்டு வருகிறாா்.

இந்தப் படிப்புக்குத் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு கல்வி பயிலும் காலம் முழுவதும் உதவித் தொகை வழங்கப்படும். இதற்கான தகவல் தொகுப்பேடு பல்கலைக்கழக இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

இந்தப் படிப்பானது கே.எம்.சி.ஹெச்., பி.எஸ்.ஜி, கங்கா, அரவிந்த் கண் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள், பயோமெடிக்கல் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட இருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com