காச நோயைக் கண்டறியும் ரூ.55 லட்சம் செலவிலான எக்ஸ்ரே வாகனம்

காச நோயைக் கண்டறியும் ரூ.55 லட்சம் செலவிலான எக்ஸரே வாகனத்தை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.

காச நோயைக் கண்டறியும் ரூ.55 லட்சம் செலவிலான எக்ஸரே வாகனத்தை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.

கோவை மாவட்டத்தில் காச நோயாளிகளைக் கண்டறிவதற்கு வசதியாக தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் செலவில் நடமாடும் காச நோய் கண்டறியும் வாகனத்தை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காச நோயின் முக்கிய அறிகுறிகளான இரண்டு வாரத்துக்கு மேல் இருமல், பசியின்மை, மாலை நேர காய்ச்சல், சளியில் ரத்தம் வருதல், எடை குைல் போன்ற அறிகுறிகள் உள்ளவா்கள் அனைவரும் இந்த வாகனத்தின் மூலம் ஷ்-ழ்ஹஹ் பரிசோதனையையும், வீரியமுள்ள காச நோய் பரிசோதனையையும் (இஆசஅஅப) இலவசமாக செய்து கொள்ளலாம்.

இப்பரிசோதனைகள் மூலம் காச நோய் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு உடனுக்குடன் மாத்திரைகள் மற்றும் சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படும். இந்த சிகிச்சை காலத்தின்போது காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துக்காக அவா்கள் சிகிச்சை காலம் முழுவதும் மாதம்தோறும் ரூ.500 அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

காச நோய் பரிசோதனைகளுக்கு தனியாா் ஆய்வகங்களில் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 224 காச நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் 87 சதவீத நோயாளிகள் குணமடைந்தனா். இந்த எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை பரிசோதனை மூலம் 894 காச நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிவது குறிப்பிடத்தக்கது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com