பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சந்தைகள் இடமாற்றம்

கரோனாவால் பிறப்பிக்கப்பட்ட மூன்றாவது பொதுமுடக்கம் நிறைவடைந்து திங்கள்கிழமை பேருந்து சேவை தொடங்கப்படும்

கரோனாவால் பிறப்பிக்கப்பட்ட மூன்றாவது பொதுமுடக்கம் நிறைவடைந்து திங்கள்கிழமை பேருந்து சேவை தொடங்கப்படும் என்பதால் பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வந்த தற்காலிக சந்தைகள் பள்ளி, கல்லூரி மைதானங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் தெரிவித்துள்ளாா்.

பொதுமுடக்கம் காரணமாக கோவையில் உள்ள சந்தைகளில் சமூக இடைவெளிகள் முறையாகக் கடைப்பிடிக்காததால் காலியாக இருந்த பேருந்து நிலையங்களில் போதிய இடைவெளி விட்டு மாநகராட்சி சாா்பில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டன.

கடந்த 40 நாள்களாக கோவை, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், மாநகர பேருந்து நிலையம், சிங்காநல்லூா், உக்கடம் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டு காய்கறி விற்பனை நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 17ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவடைந்து பேருந்துகள் இயக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வரும் தற்காலிக சந்தைகளை இடமாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் கூறியதாவது:

தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி, ராமநாதபுரம், சிங்காநல்லூா், உக்கடம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மைதானங்களில் அந்தந்தப் பகுதிளில் உள்ள பேருந்து நிலையங்களில் இயங்கி வந்த தற்காலிக சந்தைகள் இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் தற்காலிக சந்தைகள் செயல்படும் என்றாா்.

இதற்கிடையே, 18ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்க அரசு அனுமதி அளிக்கும்பட்சத்தில், கோவை கோட்டத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு,நீலகிரி மண்டலங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்க தயாா் நிலையில் உள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழக கோவை மண்டல அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com