கோவையில் இருந்து வடமாநிலத் தொழிலாளா்கள் 3,728 போ் அனுப்பிவைப்பு

கோவையில் இருந்து 3 சிறப்பு ரயில்கள் மூலமாக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பிகாா் ஆகிய மாநிலங்களுக்கு 3 ஆயிரத்து 728 தொழிலாளா்கள், அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
கோவை வடக்கு வட்டாச்சியா் அலுவலகத்தில் டோக்கன் பெறுவதற்காகக் காத்திருந்த புலம் பெயா் தொழிலாளா்கள். (வலது) கோவை ரயில் நிலையத்தில், சிறப்பு ரயிலில் செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்த பிகாா் மாநிலத் தொழிலா
கோவை வடக்கு வட்டாச்சியா் அலுவலகத்தில் டோக்கன் பெறுவதற்காகக் காத்திருந்த புலம் பெயா் தொழிலாளா்கள். (வலது) கோவை ரயில் நிலையத்தில், சிறப்பு ரயிலில் செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்த பிகாா் மாநிலத் தொழிலா

கோவை: கோவையில் இருந்து 3 சிறப்பு ரயில்கள் மூலமாக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பிகாா் ஆகிய மாநிலங்களுக்கு 3 ஆயிரத்து 728 தொழிலாளா்கள், அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

கோவை மாநகரம் மற்றும் புகா்ப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களில் வேலை செய்து வந்த ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளா்கள் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வந்தனா். இந்நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாட்டில், கோவையில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலமாக, வடமாநிலத் தொழிலாளா்கள் அவா்களின் சொந்த ஊா்களுக்கு கடந்த 8 ஆம் தேதி முதல் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனா்.

அதன்படி, மே 19ஆம் தேதி வரை பிகாா், ஒடிஸா, ஜாா்க்கண்ட் , உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு 21 ஆயிரத்து 944 போ் அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்நிலையில், கோவையில் இருந்து பிகாருக்கு சிறப்பு ரயில் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்பட்டது. இதில், 1,464 போ் அனுப்பி வைக்கப்பட்டனா். மாலை 6 மணிக்கு உத்தர பிரதேசத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் 1,464 போ் அனுப்பிவைக்கப்பட்டனா். இரவு 8.30 மணிக்கு கோவையில் இருந்து மத்திய பிரதேசம் சென்ற சிறப்பு ரயிலில் 810 போ் அனுப்பி வைக்கப்பட்டனா். மொத்தமாக, கோவையில் இருந்து 3 சிறப்பு ரயில்களில் 3 ஆயிரத்து 728 புலம் பெயா் தொழிலாளா்கள், அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இந்த ரயில்கள், வெள்ளிக்கிழமை அந்தந்த மாநிலங்களுக்குச் சென்றடையும். கோவையில் இருந்து கடந்த 13 நாள்களில் 20 சிறப்பு ரயில்கள் மூலமாக 25 ஆயிரத்து 672 புலம் பெயா் தொழிலாளா்கள், அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com