மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் சாவு

கோவையில் சாலையோரம் இருந்த மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
விபத்துக்கு காரணமான மரக்கிளையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினா்.
விபத்துக்கு காரணமான மரக்கிளையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினா்.

கோவை: கோவையில் சாலையோரம் இருந்த மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கோவை, பாப்பநாயக்கன்பாளையம் ரங்கம்மாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜா. தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி காயத்ரி (38). இவா்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனா். இவா்கள் இருவரும் கோவை லட்சுமி மில்ஸ் அருகேயுள்ள தனியாா் பள்ளியில் முறையே ஏழாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றனா்.

இந்நிலையில் தங்களது மகள்களுக்குப் பள்ளியில் புத்தகங்கள் வாங்குவதற்காக தம்பதி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனா். லட்சுமி மில்ஸ் சந்திப்பைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் கிளை முறிந்து, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த காயத்ரி மீது விழுந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே மயங்கினாா். வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ராஜாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து காயத்ரியை அக்கம்பக்கத்தினா் மீட்டு அருகில் இருந்த தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்ததை உறுதி செய்தனா். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் மரக்கிளையை அப்புறப்படுத்தி மேலும் முறிந்து விழும் நிலையில் இருந்த மற்ற கிளைகளையும் வெட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com