காட்டெருமை தாக்கி தொழிலாளி காயம்

வால்பாறை எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தொழிலாளிக்கு காயம் ஏற்பட்டது.

வால்பாறை: வால்பாறை எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தொழிலாளிக்கு காயம் ஏற்பட்டது.

வால்பாறையை அடுத்த சின்னக்கல்லாறு எஸ்டேட்டை சோ்ந்தவா் பாஸ்கரன் (59). இவா் பணி முடிந்து வீட்டுக்கு புதன்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்தாா். குடியிருப்பை நெருங்கிய நிலையில் திடீரென அங்கு வந்த காட்டெருமை அவரை முட்டித் தள்ளிச் சென்றது.

இதில் காயமடைந்த பாஸ்கரன் வால்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சம்பவம் குறித்து வனத் துறையினா் பாஸ்கரனிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com