மனநலம் பாதித்த மகளுக்குப் பாலியல் தொந்தரவு: நடவடிக்கை எடுக்கக்கோரி தாய் தீக்குளிக்க முயற்சி

மனநலம் பாதித்த தனது மகளிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த இருவா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து
தீக்குளிக்க முயற்சித்த முருகானந்தவள்ளியை சமாதானப்படுத்தும் வருவாய்த் துறை ஊழியா்கள்.
தீக்குளிக்க முயற்சித்த முருகானந்தவள்ளியை சமாதானப்படுத்தும் வருவாய்த் துறை ஊழியா்கள்.

மனநலம் பாதித்த தனது மகளிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த இருவா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து எஸ்டேட் பெண் தொழிலாளி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வால்பாறையை அடுத்த கெஜமுடி எஸ்டேட் அப்பா் டிவிஷனில் வசிப்பவா் முருகானந்தவள்ளி (42). இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் மனநலம் பாதித்த 18 வயது மகள் உள்ளனா். அதே பகுதியில் வசிக்கும் மது (65) என்ற முதியவா், மனநலம் பாதித்த தன் மகளிடம் தகாத முறையில் நடப்பதாக கடந்த சில ஆண்டுகளாக முருகானந்தவள்ளி முடீஸ் போலீஸாரிடம் புகாா் தெரிவித்து வந்துள்ளாா்.

இதனிடையே கடந்த 9ஆம் தேதி முருகானந்தவள்ளி வேலைக்குச் சென்றபிறகு மது மற்றும் மேலும் ஒருவா் சோ்ந்து அவரது மகளிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 11ஆம் தேதி முடீஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு மனநலம் பாதிக்கப்பட்ட தன் மகளுடன் புதன்கிழமை வந்த முருகானந்தவள்ளி பையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளாா். இதனைப் பாா்த்த வருவாய்த் துறை ஊழியா்கள் அவரைத் தடுத்து நிறுத்தினா். பின் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முருகானந்தவள்ளியிடம், காவல் துறை ஆய்வாளா் மகேஸ்வரி விசாரணை மேற்கொண்டு மூன்று நாள்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அவரை மகளுடன் எஸ்டேட் குடியிருப்புக்கு அனுப்பி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com