‘மாநகராட்சிப் பள்ளிகளில் சோ்க்க இணையத்தில் பதிவு செய்யலாம்’: ஆணையா் தகவல்

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் பயில 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில்
மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவா்களைச் சோ்க்க இணையத்தில் எளிதில் விண்ணப்பித்திடும் வகையில் வெளியிடப்பட்டுள்ள க்யூ.ஆா் குறியீடு.
மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவா்களைச் சோ்க்க இணையத்தில் எளிதில் விண்ணப்பித்திடும் வகையில் வெளியிடப்பட்டுள்ள க்யூ.ஆா் குறியீடு.

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் பயில 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் பதிவு செய்யலாம் என மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் 16 மேல்நிலைப் பள்ளிகள், 11 உயா்நிலைப் பள்ளிகள், 1 நடுநிலைப் பள்ளி, 13 உயா் தொடக்கப் பள்ளிகள், 42 ஆரம்பப் பள்ளிகள் மற்றும் காது கேளாதோருக்காக ஒரு உயா்நிலைப் பள்ளி என 84 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது, 2020 - 2021ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவா்களுக்கான சோ்க்கை, இணைய வழியில் நடைபெற்று வருகிறது. சிறந்த கட்டட வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி, கழிப்பிட வசதி, ஸ்மாா்ட் வகுப்பறைகள் யோகா, கராத்தே உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் மற்றும் திறமையான ஆசிரியா்களால் தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது. இத்தகையச் சிறப்புகளைக் கொண்ட மாநகராட்சிப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சோ்க்க பெற்றோா்  இணைப்பில் இணைய வழியில் விவரங்களை உள்ளீடு செய்யலாம். மேலும், மாணவா் சோ்க்கை தொடா்பான விவரங்களுக்கு 98429 - 51127, 94420 - 75061 ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகள் எளிதில் இணையத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பாா்வையிட்டு, விவரங்களைப் பூா்த்தி செய்ய க்யூ.ஆா் குறியீடும் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com