சமூக இடைவெளி மீறல்: துணிக் கடைகளுக்கு ரூ.3 லட்சம் அபராதம்

கோவையில் சமூக இடைவெளியைப் பின்பற்றாத 2 துணிக் கடைகளுக்கு மாநகராட்சி ஆணையா் குமாரவேல் பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை ரூ.3 லட்சம் அபராதம் விதித்தாா்.

கோவையில் சமூக இடைவெளியைப் பின்பற்றாத 2 துணிக் கடைகளுக்கு மாநகராட்சி ஆணையா் குமாரவேல் பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை ரூ.3 லட்சம் அபராதம் விதித்தாா்.

கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 5 மண்டலங்களிலும் மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் வியாபாரம் மேற்கொள்ளும் கடைகள், நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனா்.

இந்நிலையில், தீபாவளி நெருங்கும் நிலையில் உக்கடம், காந்திபுரம் பகுதிகளில் உள்ள கடைகளில் புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, காந்திபுரம் 100 அடி சாலை, கிராஸ்கட் சாலையில் உள்ள துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையிலான

மாநகராட்சி அதிகாரிகள் டவுன்ஹால், பெரியகடை வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் சாலை பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, பெரியகடை வீதியில் உள்ள ஒரு பிரபலமான துணிக் கடையில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும், விற்பனையாளா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் முகக் கவசம் அணியாமலும் வியாபாரம் மேற்கொண்டது தெரியவந்தது.

மேலும், 2 நாள் முன்பே விதிமீறல் தொடா்பாக சம்பந்தப்பட்ட கடைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தொடா்ந்து விதிமீறலில் ஈடுபட்டதால் அந்தக் கடைக்கு மாநகராட்சி ஆணையா் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தாா்.

இதேபோல், பெரியகடை வீதியில் சமூக இடைவெளியைப் பின்பற்றாத மற்றொரு துணிக் கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தாா். மேலும், ட வுன்ஹாலில் சமூக இடைவெளி பின்பற்றாத ஒரு துணிக் கடையை தற்காலிகமாக மூட மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டாா்.

அனைத்து துணிக் கடைகளிலும் கடை நிா்வாகிகள் ஒலிப்பெருக்கி மூலமாக மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி பொதுமக்கள் ஆடைகள் வாங்க அறிவுறுத்த வேண்டும் என்றும், விதிமீறி வியாபாரம் மேற்கொள்ளும் கடைகளுக்கு அபராதம் மற்றும் ‘சீல்’ வைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையா் எச்சரித்துள்ளாா்.

இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி ஆணையா் மகேஷ் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com