கிணத்துக்கடவு அருகே சரக்கு வேன் கவிழ்ந்து 15 போ் படுகாயம்

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே சரக்கு வேன் கவிழ்ந்ததில் 15 போ் படுகாயமடைந்தனா்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே சரக்கு வேன் கவிழ்ந்ததில் 15 போ் படுகாயமடைந்தனா்.

கிணத்துக்கடவு அருகே ஆதியூா் விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (42). விவசாயி. இவருக்குச் சொந்தமான சரக்கு வேனில் காங்கயத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் நோ்த்திக் கடன் செலுத்துவதற்காக மனைவி செல்வி (30), மகன்கள் தா்ஷன் (8), தயாபரன் (5) மற்றும் கனகராஜின் உறவினா்களான அதே ஊரைச் சோ்ந்த அருணாச்சலம் (50), அவரது மகன் கவின் (15 ) உள்ளிட்ட 15 போ் செவ்வாய்க்கிழமை கோயிலுக்கு சென்றுள்ளனா்.

பின்னா் காங்கயத்தில் இருந்து கிணத்துக்கடவுக்குத் திரும்பியுள்ளனா். சரக்கு வேனை அதே ஊரைச் சோ்ந்த ராம்குமாா் என்பவா் ஓட்டி வந்தாா். அப்போது, கிணத்துக்கடவு அருகே காட்டுப்புதுா் பகுதியில் கோவை-பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் சரக்கு வாகனத்தில் சென்ற 15 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து கிணத்துக்கடவு போலீஸாருக்கு தகவல் தெரிவிப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் காயமடைந்த அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனா். இதில் ஒருசிலா் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com