கோவையில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புப் பணிக் குழுவினா் ஆலோசனை

கோவையில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் பணிக் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்டசியின் பொருளாளா் டி.ஆா்.பாலு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் பணிக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் பணிக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

கோவையில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் பணிக் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்டசியின் பொருளாளா் டி.ஆா்.பாலு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெற்றவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் கோவை, அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கோவை - நீலகிரி ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு திமுக தோ்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளரும், திமுக பொருளாளருமான டி.ஆா். பாலு எம்.பி. தைலைமை வகித்தாா். கோவை மாநகர கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நா.காா்த்திக் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், தொழில்முனைவோா், காங்கிரஸ், மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளைத் தெரிவித்தனா். அதில், கோவையை தலைமையிடமாக கொண்டு பொள்ளாச்சியில் தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும், கௌசிகா நதியைச் சீரமைக்க வேண்டும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கோவை மாநகரில் இருந்து 20 கிலோ மீட்டருக்குள் தொழில் பேட்டைகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தோ்தல் அறிக்கை தயாரிக்கும் பணிக்குழு உறுப்பினா்கள் திருச்சி சிவா எம்.பி., திமுக துணைப் பொதுச் செயலாளா்கள் சுப்புலட்சுமி ஜெகதீஷன், அந்தியூா் செல்வராஜ், டி.கே.எஸ் இளங்கோவன், கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com