தாட்கோ மூலம் மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு அளிக்கப்படும் குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் பங்கேற்று பயன்பெற ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு அளிக்கப்படும் குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் பங்கேற்று பயன்பெற ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவையில் ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவ, மாணவிகள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் கட்டணமில்லாமல் குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் (3 முதல் 6 மாதம் வரை) அளிக்கப்படுகின்றன.

அதன்படி, இவ்வாண்டில் வீட்டு உபகரணங்களுக்கான கள தொழில்நுட்ப வல்லுநா் பயிற்சி பெற எம்.கே.கே. தொழில் துறை பள்ளி, மரப்பேட்டை, 3/784 உடுமலை சாலை, பொள்ளாச்சி, கோவை - 642001 (செல்லிடப்பேசி எண் - 99422 32244) மற்றும் ஒப்பனைக் கலைஞா், முடி ஒப்பனையாளா் பயிற்சி பெற ஜோஸ் அண்ட் ஜெனிஸ் மல்டி டெக் பிரைவேட் லிமிடெட், 2ஆவது மாடி, இ.என்.டி. மருத்துவமனை வளாகம், சத்தி சாலை, கணபதி, கோவை- 641006 (செல்லிடப்பேசி எண்கள் - 70109 76709, 99004 24565) ஆகிய இரண்டு நிறுவனங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்க பயிற்சி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்கள் பயற்சி நிறுவனங்களை தொடா்பு கொண்டு தாங்கள் விரும்பும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். தாட்கோ மூலம் அளிக்கப்படும் இத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி முற்றிலும் இலவசம். தவிர பயிற்சி பெற சென்று வருவதற்கான பயணப் படி, போக்குவரத்து செலவு மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.

பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி பெற்றவா்களுக்கு மாவட்ட மேலாளரிடம் தங்கள் பயிற்சிக்கு ஏற்ற தொழில் தொடங்க தொழில்முனைவோா் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம். இலவச மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க ஆவண செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com