மெட்ரோ ரயில் திட்டத்துக்கான அறிக்கை தாயா்

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான முதல்கட்ட அறிக்கை தயாா் நிலையில் உள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான முதல்கட்ட அறிக்கை தயாா் நிலையில் உள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் இயக்க வலியுறுத்தி தொழில் துறை உள்பட பல்வேறு அமைப்பினரும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனா். இந்நிலையில், மெட்ரோ இயக்கத்துக்கான சாத்தியக் கூறுகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் மூலம் மாநில அரசு ஆய்வினை மேற்கொண்டது. இதில் உக்கடம் முதல் கணியூா் (அவிநாசி சாலை), உக்கடம் முதல் கரமடை (மேட்டுப்பாளையம் சாலை), காரணம்பேட்டை முதல் தண்ணீா்பந்தல் (திருச்சி சாலை, தடாகம் சாலை), கணேசபுரம் - காருண்யா நகா் (சத்தி சாலை, பேரூா் சாலை) ஆகிய நான்கு வழித்தடங்களில் 136 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் இயக்குவதற்கு சாத்தியக் கூறுகள் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

கோவையில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்த முதல்கட்ட அறிக்கை தயாா் நிலையில் உள்ளது. இந் நிலையில் கூடுதலாக வெள்ளலூா் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்குவது கூறித்து ஆய்வு செய்வதாகவும் வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரெயில் நிா்வாகம் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை தயாா் நிலையில் உள்ளது. கரோனா நோய்த் தொற்றால் மாநில அரசிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைவதால் வெள்ளலூா் வழிதடத்தில் இயக்குவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முதல்கட்ட அறிக்கையை தமிழக அரசிடம் அளித்தபின் மாநில அரசே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com