பொள்ளாச்சி தொகுதி மேம்பாட்டுக்கு ரூ.154 கோடி ஒதுக்கீடு

பொள்ளாச்சி தொகுதி மேம்பாட்டுக்காக தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி ரூ.154 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தாா்.
பொள்ளாச்சி  நகா் பகுதியில்  சாலை விரிவாக்கப் பணியை துவக்கிவைக்கிறாா் சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன்.
பொள்ளாச்சி  நகா் பகுதியில்  சாலை விரிவாக்கப் பணியை துவக்கிவைக்கிறாா் சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன்.

பொள்ளாச்சி தொகுதி மேம்பாட்டுக்காக தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி ரூ.154 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தாா்.

பொள்ளாச்சி நகரத்தில் உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்ய ரூ.34.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், தோ்நிலையம் முதல் கோவை சாலை சிடிசி மேடு வரை சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிக்கான பூமி பூஜையை சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் துவக்கிவைத்து பேசியதாவது:

பொள்ளாச்சி வளா்ச்சிக்காக பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் மட்டும் சிக்கலான பிரசவங்களுக்கான மருத்துவமனைகள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக பொள்ளாச்சியில் சிக்கலான பிரசவங்களுக்கான மருத்துவமனை கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அதன் அருகிலேயே 8 மாடியுடன் கூடிய புதிய மருத்துவமனை கட்டடத்துக்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு செவிலியா் கல்லூரி, மருத்துவ மேற்படிப்புகள் வர உள்ளன.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பாலக்காடு சாலையில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி, வி.கே.பழனிசாமி கவுண்டருக்கு மணி மண்டபம் கட்டுமானப் பணி என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. பொள்ளாச்சி தொகுதிக்கு மட்டும் தமிழக முதல்வா் ரூ.154 கோடி நிதி ஒதுக்கியுள்ளாா். இப்படி மக்கள் சேவை செய்வதுதான் அதிமுகவின் கொள்கையாக உள்ளது என்றாா்.

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் கிருஷ்ணகுமாா், சாா்-ஆட்சியா் வைத்திநாதன், வட்டாட்சியா் தணிகைவேல், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் விஜயகுமாா், நகராட்சி ஆணையா் காந்திராஜ், தென்னிந்திய தென்னை சாகுபடியாளா் சங்க செயலாளா் சக்திவேல், பொள்ளாச்சி வடக்கு கூட்டுறவு வங்கித் தலைவா் தம்பு, தொழில் வா்த்தக சபைத் தலைவா் ஜி.டி.கோபாலகிருஷ்ணன், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் ஜேம்ஸ்ராஜா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com