கடைவீதிக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பணியாளா்கள் 15 போ் கைது

கோவையில் கடை வீதிக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி பணியாளா்கள் 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் கடை வீதிக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி பணியாளா்கள் 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, பெரியகடை வீதி காவல் நிலையத்துக்கு உள்பட்ட ராஜவீதி உள்ளிட்ட கடை வீதி பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள், பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ராஜவீதிக்கு வரும் பொதுமக்களை அப்பகுதியில் உள்ள சிறிய கடைகளில் பணியாற்றும் பணியாளா்கள் சிலா் தங்கள் கடைக்கு வருமாறு வற்புறுத்தி, அழைத்து விற்பனை செய்வதாக புகாா் எழுந்தது.

இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் சிலா் இது தொடா்பாக போலீஸாரிடம் புகாா் தெரிவித்துள்ளனா். இதையடுத்து அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் சம்பந்தப்பட்ட கடை பணியாளா்களை எச்சரித்துள்ளனா்.

ஆனால் மீண்டும் வாடிக்கையாளா்களுக்கு கடைகளின் பணியாளா்கள் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பணியாளா்கள் 15 பேரை போலீஸாா் கைது செய்து, பெரியகடை வீதி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா் மாலையில் அவா்களை எச்சரித்து விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com