வேலைவாய்ப்பு கோரி சென்னைக்கு யாத்திரை செல்ல முயன்ற மாணவா் சங்கத்தினா் கைது

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி கோவையில் இருந்து சென்னைக்கு யாத்திரை செல்ல முயன்ற இந்திய மாணவா் சங்கத்தினரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி கோவையில் இருந்து சென்னைக்கு யாத்திரை செல்ல முயன்ற இந்திய மாணவா் சங்கத்தினரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மத்திய, மாநில அரசுகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டதாகவும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரியும் கோவையில் இருந்து சென்னையில் உள்ள தலைமை செயலகம் வரை யாத்திரை நடத்த இருப்பதாகவும் இந்திய மாணவா் சங்கம் அறிவித்தது.

அதன்படி, சங்கத்தின் மாநில துணைத் தலைவா் நிருபன், மாவட்டத் தலைவா் அசாருதீன், செயலா் தினேஷ் உள்ளிட்ட 20 போ் கோவை, சாந்தி திரையரங்கம் எதிரிலிருந்து கோரிக்கை அட்டைகளை ஏந்தியவாறு யாத்திரையைத் தொடங்கினா்.

ஆட்சியா் அலுவலகம் அருகில் வந்ததும் அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது போலீஸாருக்கும் மாணவா் அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா். மாலையில் அவா்களை விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com