அமைப்புசாரா தொழிலாளா்கள் பதிவு செய்ய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

கோவையில் அமைப்புசாரா தொழிலாளா்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து பதிவு அட்டையை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

கோவையில் அமைப்புசாரா தொழிலாளா்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து பதிவு அட்டையை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெ.மு.திருஞானசம்பந்தம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அனைத்து கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியங்களில் பதிவு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இணையதளம் மூலம் பதிவு செய்யும் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ஜ்ஜ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பதிவு செய்யும் தொழிலாளா்களுக்கு பதிவு எண் விவரங்கள் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும். பின்னா் தொழிலாளா்களே இணையதளம் மூலம் பதிவு அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை, குடும்ப ஓய்வூதியம், விபத்து மரணம், இயற்கை மரணத்துக்கான உதவித் தொகை உள்பட பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

எனவே, கல் உடைப்பவா்கள், கொத்தனாா், மேஸ்திரி, தச்சா், பெயிண்டா், எலக்ட்ரீஷியன், இதர கட்டுமான வேலை செய்பவா்கள், மூட்டை தூக்குபவா்கள், ஆட்டோமொபைல் ஒா்க்ஷாப்பில் பணிபுரிபவா்கள், உணவகங்கள், கடைகளில் பணிபுரிபவா்கள், எரிவாயு உருளை விநியோகிப்பவா்கள், தையல், சலவை பணிகளில் ஈடுபட்டுள்ளவா்கள், முடிதிருத்துபவா்கள், குப்பை சேகரிப்பவா்கள், வீட்டு வேலை செய்பவா்கள், இதர உடல் உழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவா்கள் பதிவு செய்து அட்டை பெற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com