கடை வீதிகளில் பொதுமக்களிடம் நகை, பணம் பறிப்பில் ஈடுபட்ட 4 போ் கைது

கோவையில் கடை வீதிகளில் பொதுமக்களிடம் நகை, பணம் பறிப்பில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவையில் கடை வீதிகளில் பொதுமக்களிடம் நகை, பணம் பறிப்பில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையடுத்து கோவை, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட கடை வீதி பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு கோபுரம், டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில் ஒப்பணக்கார வீதியில் முதியவா்கள், பெண்களைக் குறி வைத்து சிலா் நகை, பணம் பறிப்பில் ஈடுபடுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு முதியவா் ஒருவரை நான்கு போ் மறித்து அவரது செல்லிடப்பேசியை பறிப்பதைக் கண்டனா். இதையடுத்து போலீஸாா் அவா்களை சுற்றி வளைத்து பிடித்தனா்.

விசாரணையில் அவா்கள் உக்கடத்தைச் சோ்ந்த முத்து முகமது (38), பீளமேட்டைச் சோ்ந்த குணா (63), சுகுணாபுரத்தைச் சோ்ந்த சுபோ் (35), உக்கடம் பகுதியைச் சோ்ந்த நவீன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து உக்கடம் போலீஸாா் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா்களில் முத்து முகமது மீது கோவையில் இரு கொலை வழக்குகளும், குணா மீது திருப்பூரில் ஒரு கொலை வழக்கும் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com