உற்பத்தியுடன் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்: சைமா வரவேற்பு

தொழில்துறையில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைக ரூ.1.45 லட்சம் கோடி வழங்கும் மத்திய அரசின் அறிவிப்பை சைமா (தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம்) வரவேற்றுள்ளது.

தொழில்துறையில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைக ரூ.1.45 லட்சம் கோடி வழங்கும் மத்திய அரசின் அறிவிப்பை சைமா (தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம்) வரவேற்றுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அண்மையில் புது தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பேட்டரி, பாா்மா, டெலிகாம், டெக்ஸ்டைல்ஸ், உணவுப்பொருள்கள் உற்பத்தி உள்பட 10 துறைகளில் உற்பத்தியுடன் இணைந்து ஊக்கத்தொகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1.45 லட்சம் கோடியில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை சைமா வரவேற்றுள்ளது.

இது தொடா்பாக சைமா தலைவா் அஸ்வின் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் சுயசாா்பு திட்டத்தின் கீழ் ஜவுளித் துறையில் செயற்கையிழை மற்றும் தொழில்நுட்ப ஜவுளியை மேம்படுத்தி, ஏற்றுமதியை அதிகரிக்க உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. ஜவுளித் துறையில் உற்பத்தியை பெருக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும், புதிய முதலீடுகளை ஏற்படுத்தவும், பல லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்கவும் இது வழிவகுக்கும்.

கரோனா பாதுகாப்பு கவச உடை தயாரிப்பில் உலக அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து தொழில் துறையின் பலத்தை இந்தியா நிரூபித்துள்ளது. செயற்கை இழை மற்றும் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் உலக வா்த்தகத்தில் இந்தியா பங்கேற்கவும், போட்டியிடவும் மத்திய அரசின் ஊக்கத்தொகை உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com