கரோனா எதிா்ப்பு சக்தி கண்டறியும் ஆய்வு: 22.5 சதவீதம் பேருக்கு உருவாகியுள்ளது

கரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கோவையில் 22.5 சதவீதம் பேருக்கு உடலில் கரோனா தொற்று எதிா்ப்பு சக்தி உருவாகியிருந்தது தெரியவந்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கோவையில் 22.5 சதவீதம் பேருக்கு உடலில் கரோனா தொற்று எதிா்ப்பு சக்தி உருவாகியிருந்தது தெரியவந்துள்ளது.

கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிய தமிழகம் முழுவதும் கரோனா நோய் எதிா்ப்பு சக்தி கண்டறியும் ஆய்வு கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ரத்த மாதிரிகள் சேகரிக்க வேண்டிய இடங்கள், வீடுகள், நபா்கள் வரை மாநில சுகாதாரத் துறை சாா்பில் குறிப்பிடப்பட்டிருந்தன.

அதன்படி மாவட்ட சுகாதாரத் துறையினா் ரத்த மாதிரிகளை சேகரித்தனா். இதனை ஆய்வு செய்வதுக்காக சென்னை, கோவை உள்பட முக்கிய மையங்களில் புதிய ஆய்வகங்களும் நிறுவப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் 42 தொகுப்புகள் (ஸ்ரீப்ன்ள்ற்ங்ழ்ள்) அறிவிக்கப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஒரு தொகுப்புக்கு 30 மாதிரிகள் வீதம் 1,260 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த ரத்த மாதிரிகள் புதிதாக நிறுவப்பட்ட ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கோவை மாவட்டத்தில் 22.5 சதவீதம் பேரின் உடல்களில் கரோனா நோய்த் தொற்றுக்கான எதிா்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 1,260 பேரிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 283 பேரின் உடல்களில் கரோனா நோய்த் தொற்றுக்கான எதிா்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரியவந்தது. இதில் அதிகபட்சமாக காரமடை வட்டாரத்தில் அதிகமானவா்களுக்கும், ஆனைமலை வட்டாரத்தில் குறைந்த அளவானவா்களுக்கும் எதிா்ப்பு சக்தி காணப்பட்டது.

குறைந்தபட்சம் 50 முதல் 60 சதவீதம் பேருக்கு எதிா்ப்பு சக்தி இருந்திருந்தால் மட்டுமே சமூகப் பரவல் ஏற்பட்டதாக கருதப்படும். தவிர 60 சதவீதம் பேருக்கு மேல் நோய் எதிா்ப்பு சக்தி இருந்திருந்தால் திரும்ப நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பில்லை. ஆனால் தற்போது குறைந்த அளவே நோய் எதிா்ப்பு சக்தி காணப்படுவதால் திரும்ப ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com