கோவையில் களைகட்டியது தீபாவளி: கடைவீதிகளில் கூட்டம்; போக்குவரத்து நெரிசல்

தீபாவளிக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை புத்தாடைகள் வாங்க கோவை கடைவீதிகளில் மக்கள் குவிந்தனா். இதனால், நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவை, டவுன்ஹால் பகுதியில் காணப்பட்ட போக்குவரத்து நெரிசல். ~கோவை, பெரியகடை வீதியில், வெள்ளிக்கிழமை புத்தாடை வாங்கக் குவிந்த மக்கள் கூட்டம்.
கோவை, டவுன்ஹால் பகுதியில் காணப்பட்ட போக்குவரத்து நெரிசல். ~கோவை, பெரியகடை வீதியில், வெள்ளிக்கிழமை புத்தாடை வாங்கக் குவிந்த மக்கள் கூட்டம்.

தீபாவளிக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை புத்தாடைகள் வாங்க கோவை கடைவீதிகளில் மக்கள் குவிந்தனா். இதனால், நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் 15 நாள்களுக்கு முன்பாகவே கோவையில் உள்ள கடைவீதிகளில் புத்தாடை, நகைகள், அலங்காரப் பொருள்கள், அழகு சாதனங்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்த ஆண்டு, கரோனா தொற்று காரணமாக கடைவீதிகளில் கடந்த ஒரு வாரம் முன்பிருந்துதான் புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் அதிகமானோா் கடைவீதிகளில் குவிந்தனா். இந்நிலையில், கோவை டவுன்ஹால், பெரியகடைவீதி, ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் புத்தாடை வாங்க மக்கள் வெள்ளிக்கிழமை குவிந்தனா். மாலையில், துணிக்கடைகளில் கட்டுக்கடக்காத கூட்டம் காணப்பட்டது. இதேபோல, நகரில் உள்ள பட்டாசுக் கடைகள், இனிப்புக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. வெள்ளிக்கிழமை மாலை முதல் நகருக்குள் வாகனப் போக்குவரத்து அதிகமாகக் காணப்பட்டதால், டவுன்ஹால், காந்திபுரம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸாா், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். மாலை நேரத்தில் திருச்சி சாலை, அவிநாசி சாலைகளில் உள்ள சிக்னல்களில் வாகனங்கள் தேங்கி நின்றன.

பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள்:

தீபாவளி தினத்தைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் வருவதால், தொடா் விடுமுறைக்கு ஏராளமானோா் வெள்ளிக்கிழமை தங்களின் சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டுச் சென்றனா். இதனால், அவிநாசி சாலை, கொடிசியா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையம், சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் வெளியூா் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com