பட்டாசு கடைகளில் பாதுகாப்பு: வால்பாறையில் ஆலோசனைக் கூட்டம்

பட்டாசு கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் விபத்தின்றி தீபாவளியை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வால்பாறையில் நடைபெற்றது.
வால்பாறையில்  துணை ஆட்சியா்  பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு,

துணை ஆட்சியா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ராஜா, காவல் ஆய்வாளா் மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வால்பாறை நகரில் உள்ள பட்டாசு கடைகளில் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் வைத்திருக்க வேண்டும். கூட்ட நெரிசல் ஏற்படும்போது கடைகாரா்கள் வாடிக்கையாளா்களை சமூக இடைவெளியுடன் நிற்க வைக்க வேண்டும். விபத்தின்றி தீபாவளி பண்டிகையை கொண்டாட அதிகாரிகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தீயணைப்புத் துறையினா் பட்டாசு கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று துணை ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

கூட்டத்தில் வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பினா், தீயணைப்புத் துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com