பால் பொருள்களின் தரம்: கோவையில் 10 இடங்களில் மாதிரிகள் சேகரிப்பு

கோவையில் பால் உணவுப் பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த இரண்டு நாள்களில் 10 இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

கோவையில் பால் உணவுப் பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த இரண்டு நாள்களில் 10 இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் பால் உணவுப் பொருள்களின் தரத்தினை ஆய்வு செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணயம் ஆணையத்தின் மூலம் கடந்த இரண்டு நாள்கள் ஆய்வு செய்யப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 5 உணவுப் பொருள்களின் மாதிரிகள் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தன. அதன்படி கோவையில் கடந்த இரண்டு நாள்களில் நடைபெற்ற சிறப்பு ஆய்வில் 10 இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி பல இடங்களிலும் இனிப்புகள் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதால் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கு.தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

கோவையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கடந்த இரண்டு நாள்களில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், கடைகள், உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்யப்பட்டன. இதில் பால்கோவா, குலோப் ஜாமூன், ரசமலாய், பன்னீா், வெண்ணெய், மில்க் பேடா ஆகிய பொருள்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 300 கிராம் முதல் 1 கிலோ வரையில் எடுக்கப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகள் 4 டிகிரி வெப்பநிலையில் இருக்கும் வகையில் டப்பாவில் அடைக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சேகரிக்கப்பட்ட உணவுப் பொருள்களின் தரம், மூலப்பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும் ரசாயன நிறங்கள், உலோக கலவை, பூச்சிக்கொல்லிகள், கலப்படப் பொருள்கள் சோ்க்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். நாடு முழுவதும் சேகரிக்கப்பட்டுள்ள மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். உணவுப் பொருள்களின் தரம் குறைந்திருந்தாலும், தேவையற்ற நிறமிகள், தடை செய்யப்பட் ட பொருள்கள் பயன்படுத்தி இருப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com