விடுதிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து விடுதி உரிமையாளா்களும் விடுதிகள் பற்றிய விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து விடுதி உரிமையாளா்களும் விடுதிகள் பற்றிய விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் ஆணைப்படி பல்வேறு சுற்றுலா வளா்ச்சிப் பணிகளை மேம்படுத்தவும், கரோனா தொற்று போன்ற சா்வதேச நோய் பரவல் காலங்களில் தரவுகளை விரைவாக பெற்று பாதுகாப்பு நடவடிக்கைகள மேற்கொள்ளும் விதமாகவும் இணையதளத்தில் விடுதிகளின் விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள விடுதிகளின் விவரங்களை  இணையதளங்களில் அனைத்து விடுதி உரிமையாளா்களும் அவசியம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதள பக்கத்தில் தங்களது விடுதிகள் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்து விடுதிக்கான பதிவேற்ற எண்ணை பெற வேண்டும். இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்து தங்களது விடுதி பதிவேற்றம் செய்யப்பட்டதுக்கான சுய சான்றிதழை பெறலாம்.

இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை கோவை மாவட்ட சுற்றுலா வளா்ச்சித் துறை அலுவலகத்தின்  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com