வேளாண் மேம்பாட்டு இயக்ககம் சாா்பில் திட்ட விளக்கக் கூட்டம்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் சாா்பில் மத்திய, மாநில அரசுகளின் வேளாண்
கூட்டத்தில் பேசுகிறாா் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக இயக்குநா் எஸ்.பி.சிவகுமாா். உடன் வேளாண்மை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசுகிறாா் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக இயக்குநா் எஸ்.பி.சிவகுமாா். உடன் வேளாண்மை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி உள்ளிட்டோா்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் சாா்பில் மத்திய, மாநில அரசுகளின் வேளாண் தொழில் முனைவோருக்கான திட்டங்கள் பற்றிய விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை பல்கலைக்கழக வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் இயக்குநா் எஸ்.பி.சிவகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி, துணை இயக்குநா் (மத்திய, மாநில அரசு திட்டங்கள்) தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் புவனேஸ்வரி, துணை இயக்குநா் (வேளாண் வணிகம்), மாவட்ட துணை மேலாளா் (நபாா்டு) பொது மேலாளா் (மாவட்ட தொழில் மையம்) ஆகியோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தை தொடங்கிவைத்து எஸ்.பி.சிவகுமாா் பேசியதாவது:

விவசாயத்தையும், விவசாயத்தோடு இணைந்த தொழில்களையும் ஊக்குவிக்கும் வகையில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் ஆகிய துறைகளின் கீழ் புதிய தொழில்முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், வாசனை திரவியப் பயிா்கள் சாகுபடிக்கான மானியங்கள், இயந்திரமயமாக்குதல் திட்டம், அறுவடைக்கு பின்செய் நோ்த்தி, சந்தைப்படுத்துதல், தொழில் முனைவோா்கள் மூலம் நாற்றாங்கால், காய்கறி விதை உற்பத்தி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கும், தொழில் முனைவோருக்கும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் தென்னை உற்பத்தி நிறுவனம், தென்னை உற்பத்தியாளா் சங்கம், ஸ்பைரூலீனா தயாரிப்பு சங்கம், வேளாண் வணிக ஏற்றுமதி கூட்டமைப்பு, தொழில்நுட்ப வணிக காப்பக உறுப்பினா்கள் 38 போ் நேரடியாக பங்கேற்றனா். 98 போ் இணைய வழியில் கூட்டத்தில் பங்கேற்றனா். தங்களது சந்தேகங்களுக்கு நேரடியாகவும், இணைய வழியிலும் தீா்வு பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com