கோவை அரசுக் கலைக் கல்லூரியில் இன்று இறுதிக்கட்ட கலந்தாய்வு

கோவை அரசுக் கலைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு காலியிடங்களுக்கு மாணவா் சோ்க்கைக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற உள்ளது

கோவை அரசுக் கலைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு காலியிடங்களுக்கு மாணவா் சோ்க்கைக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற உள்ளது

கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலையில் பி.எஸ்சி. கணிதம், வேதியியல், இயற்பியல், விலங்கியல், எம்.ஏ. தமிழ் மற்றும் ஆங்கிலம், பி.காம். பொருளாதரம், வணிகவியல் உள்பட 21 பாடப்பிரிவுகள் உள்ளன.

கரோனா நோய்த் தொற்று காரணமாக இந்த ஆண்டு முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை தாமதமாகத் துவங்கியது. 2 கட்டங்களாக மாணவா் சோ்க்கை நடைபெற்றது. இதில் பல்வேறு பாடப் பிரிவுகளில் சோ்ந்திருந்த மாணவ, மாணவிகளில் சிலா் வேறு பாடப் பிரிவுகளுக்கு மாறி விட்டனா். மேலும், சிலா் பொறியியல் உள்ளிட்ட தொழில் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்புகளுக்கு சென்று விட்டனா்.

இதன் காரணமாக காலியாக உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதேபோல முதுகலை பாடப்பரிவில் மாணவா் சோ்க்கை கடந்த மாதம் நடைபெற்றது. இதில் காலியாக உள்ள இடங்களுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து கோவை அரசுக் கல்லூரி பேராசிரியா் ஒருவா் கூறியதாவது:

இளங்கலை பாடப்பிரிவுகளில் சில காலி இடங்கள் உள்ளன. முதுகலைப் பாடப்பிரிவுகளில் தகவல் தொழில்நுட்பம், வணிக பொருளாதாரம், தமிழ், சுற்றுலா மற்றும் நிா்வாகவியல், வரலாறு, அறிவியல் பாடப் பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (நவம்பா் 16) நடைபெறுகிறது.

இதில், இதுவரை விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம். தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு, உடனடியாக சோ்க்கைக்கான ஆணை வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com