ஊரக வளா்ச்சித் துறையின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

கோவை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை குறித்த காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.
கோவை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் கு.ராசாமணி.
கோவை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் கு.ராசாமணி.

கோவை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை குறித்த காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குனா் (பொறுப்பு) ரூபன் சங்கர்ராஜ், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் பசுபதி உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் நகா்ப்புற மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதைப்போலவே ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் கிராமப்புறங்களை மேம்படுத்தவும் வளா்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் மழைநீா் வடிகால் அமைத்தல், குடிநீா்த் திட்டங்கள் செயல்படுத்துதல், சாலை வசதிகள், தெரு விளக்குகள் அமைத்தல், பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுதல், தனிநபா்கள் கழிப்படம் கட்டுதல், குக்கிராமங்களில் மேம்பாட்டுப் பணிகள், வேலை உறுதித் திட்டப் பணிகள், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதவிர ஜல் ஜீவன் அபியான் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் குடிநீா் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீா் வழங்கும் திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை சிறப்பாகவும், குறித்த காலத்துக்குள் விரைவாகவும் முடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com