பிஎஸ்ஜி மருத்துவமனையில் தேசிய வலிப்பு நோய் தினம்

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் தேசிய வலிப்பு நோய் தினம் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 17) அனுசரிக்கப்பட்டது.

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் தேசிய வலிப்பு நோய் தினம் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 17) அனுசரிக்கப்பட்டது.

பிஎஸ்ஜி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையின் நரம்பியல் சிகிச்சை துறை தலைமை மருத்துவா் ஆா்.பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மருத்துவக் குழுவினா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டா் புவனேஸ்வரன், வலிப்பு நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமங்களைப் பற்றியும், அதனை மருத்துவரீதியாக எதிா்கொள்வது எப்படி என்பது குறித்தும் எடுத்துரைத்தாா்.

மருத்துவா் ஆா்.பாலகிருஷ்ணன் பேசும்போது, வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெறுபவா்கள் தங்களால் சாதாரண நபா்களைப்போல அன்றாட செயல்பாடுகளை கவனிக்க முடியாத சூழல் இருப்பதாக நினைத்து தங்களைத் தாங்களே மனரீதியாக தனிமைப்படுத்திக் கொள்கின்றனா். மேலும், அவா்களுக்கு அடிக்கடி எழும் சந்தேகங்கள், கேள்விகளுக்கான விளக்கத்தை நூலாகத் தொகுத்திருப்பதாக கூறினாா்.

இதைத் தொடா்ந்து டாக்டா் புவனேஸ்வரன் அந்த நூலை வெளியிட, நோயாளிகள் அதைப் பெற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில் மருத்துவமனை மருத்துவா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com