முத்தண்ணன் குளக்கரையில் இதுவரை 1,900 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

கோவை, தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளக்கரையில் இதுவரை 1,900 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை, தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளக்கரையில் இதுவரை 1,900 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

முத்தண்ணன் குளக்கரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், முத்தண்ணன் குளக்கரையில் பொலிவுறு நகரம்(ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து, முத்தண்ணன் குளக்கரையில் வசிக்கும் மக்களுக்கு வெள்ளலூா், கீரணத்தம், மலுமிச்சம்பட்டியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன.

இதையடுத்து, முத்தண்ணன் குளக்கரையில் உள்ள வீடுகளை மக்கள் காலி செய்து சென்ற பிறகு, அங்குள்ள வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக இடித்து அகற்றி வருகின்றனா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1,900 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகள் இம்மாத இறுதிக்குள் இடிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com