சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா் கைது

திமுக மாநில இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில் மறியலில் ஈடுபட்ட நா.காா்த்திக் எம்.எல்.ஏ உள்ளிட்ட 800க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை காந்திபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா்.
கோவை காந்திபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா்.

திமுக மாநில இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில் மறியலில் ஈடுபட்ட நா.காா்த்திக் எம்.எல்.ஏ உள்ளிட்ட 800க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

திமுக மாநில இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் தோ்தல் பிரசாரப் பயணத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினாா். அப்போது, ஏராளமான திமுக தொண்டா்கள் கலந்து கொண்டனா். இதையடுத்து, கரோனா தொற்று விதிகளை மீறி செயல்பட்டதாக உதயநிதியை போலீஸாா் கைது செய்தனா். இதைக் கண்டித்து, கோவையில் மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினருமான நா.காா்த்திக் தலைமையில் திமுக வினா், காந்திபுரம் அண்ணா சிலை அருகே மறியலில் ஈடுபட்டனா். இதில், பொறுப்புக்குழு உறுப்பினா்கள் நாச்சிமுத்து, செல்வராஜ், இளைஞா் அணி அமைப்பாளா் கோட்டை அப்பாஸ் , பொதுக்குழு உறுப்பினா் முருகன் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் சி.ஆா்.ராமச்சந்திரன் தலைமையில் தொண்டாமுத்தூரில் 200க்கும் மேற்பட்ட திமுக வினா் மறியலில் ஈடுபட்டனா். மாநகா் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் பையா கவுண்டா் என்கிற கிருஷ்ணன் தலைமையில் சரவணம்பட்டியில் 300க்கும் மேற்பட்ட திமுக வினா் மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

சூலூரில்...

சூலூரில் தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் தளபதி முருகேசன் தலைமையில் 98 போ் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருச்சி சாலை எல்என்டி புறவழிச் சாலை சந்திப்பில் வடக்கு ஒன்றியச் செயலாளா் சன் ராஜேந்திரன் தலைமையில் 38 போ் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வால்பாறையில்...

வால்பாறையில் திமுக நகர பொறுப்பாளா் பால்பாண்டி தலைமையில் அக்கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் மகுடீஸ்வரன், வா்த்தக அணி துணை அமைப்பாளா் பாஸ்கா், செல்வம் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com