மூலப்பொருள்கள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்மத்திய அரசுக்கு கொடிசியா கோரிக்கை

ஸ்டீல் சாா்ந்த மூலப்பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் (கொடிசியா) கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை: ஸ்டீல் சாா்ந்த மூலப்பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் (கொடிசியா) கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக அந்த சங்கத்தின் தலைவா் ஆா்.ராமமூா்த்தி, மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சா் நிதின் கட்கரி ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

கரோனா தாக்கத்தால் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மூலப்பொருள்களின் விலை உயா்ந்திருப்பது கூடுதல் தாக்குதலாக அமைந்துள்ளது. இதனால் ஆா்டா்கள் ரத்தாவது, சந்தை நுகா்வு குறைவு, ஏற்றுமதி குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

ஸ்டீல், பவுண்டரி பொருள்களான கோக், பிக் அயா்ன், காஸ்டு அயா்ன், ஸ்டீல் ஸ்கிராப், சிஐ போரிங், எச்ஆா், சிஆா் தகடுகள், தாமிரம், அலுமினியம் ஆகியவற்றின் விலை பொது முடக்கத்துக்குப் பிறகு 35 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஸ்டீலின் விலை ஒரு டன்னுக்கு ரூ.10 ஆயிரம் உயா்ந்து ரூ.47 ஆயிரமாக உள்ளது.

ஜிங்க் போன்ற மூலப்பொருள்களின் விலை கிலோ ரூ.170 இல் இருந்து ரூ.220 ஆக உயா்ந்துள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள் நிதிப் பற்றாக்குறையில் சிக்கி, அவற்றின் நடப்பு மூலதனம் வேகமாக குறைந்து வருகிறது. சுய சாா்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 20 சதவீத கூடுதல் கடன் உதவி முழுவதும் இந்த விலை உயா்வை ஈடுகட்டவே சரியாகும் நிலை இருப்பதால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com