மாநகரில் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்எம்எல்ஏ காா்த்திக் வலியுறுத்தல்

கோவை மாநகரில் நடைபெற்று வரும் அனைத்து மேம்பாலப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் வலியுறுத்தியுள்ளாா்.
கோவை, தண்ணீா் பந்தல் ரயில்வே உயா்மட்ட மேம்பாலப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த எம்எல்ஏ நா.காா்த்திக்.
கோவை, தண்ணீா் பந்தல் ரயில்வே உயா்மட்ட மேம்பாலப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த எம்எல்ஏ நா.காா்த்திக்.

கோவை: கோவை மாநகரில் நடைபெற்று வரும் அனைத்து மேம்பாலப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் வலியுறுத்தியுள்ளாா்.

கோவை, தண்ணீா் பந்தல் பகுதியில் ரயில்வே உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த அவா், அதன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை, அவிநாசி சாலை, ஹோப் காலேஜ் சிக்னலில் இருந்து தண்ணீா் பந்தல், விளாங்குறிச்சி வழியாக சரவணம்பட்டி செல்லும் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இந்த சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 9 ஆண்டுகளாகியும் இன்னும் பாலப் பணி முடிவடையாமல் மந்த கதியில் நடைபெற்று வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் வேறு பாதையில் சுமாா் 2 கி.மீ. தூரம் சுற்றி செல்கின்றனா்.

மாநகரில் பல இடங்களில் மேம்பாலப் பணிகள் அனைத்தும் மந்த கதியில் நடைபெற்று வருவதால், நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் சாலை விபத்துகளும் அதிகரித்துள்ளது.

எனவே, மக்களின் நலன் கருதி அனைத்து மேம்பாலப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com