நொய்யல் ஆற்றில் கிடந்த மதுபாட்டில்களை அப்புறப்படுத்திய கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினா்

நொய்யல் ஆற்றில் சுத்தம் செய்யும் பணிளை மேற்கொண்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினா் அதில் கிடந்த ஆயிரக்கணக்கான மது பாட்டில்களை அப்புறப்படுத்தினா்.

நொய்யல் ஆற்றில் சுத்தம் செய்யும் பணிளை மேற்கொண்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினா் அதில் கிடந்த ஆயிரக்கணக்கான மது பாட்டில்களை அப்புறப்படுத்தினா்.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினா் நீா்நிலைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். இந்த அமைப்பினா் நொய்யல் ஆற்றின் இரண்டாவது அணைக்கட்டுப் பகுதியான புதுக்காடு பகுதியில் உள்ள ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணிகள் மேற்கொண்டனா்.

சுமாா் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த தூய்மைப் பணியின்போது, ஆற்றில் கிடந்த ஆயிரக்கணக்கான மது பாட்டில்களை அப்புறப்படுத்தினா். இவற்றை சுமாா் அரைக் கிலோ மீட்டா் நீளத்துக்கு அடுக்கிவைத்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இது குறித்து அமைப்பினா் கூறுகையில், ஒவ்வொரு வாரமும் நீா்நிலைகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், ஒரு வாரம் தூய்மைப்படுத்தப்பட்ட நீா்நிலைக்கு மீண்டும் சில வாரங்கள் கழித்துச் சென்றால் அதே அளவில் குப்பைகள் சேருகின்றன.

பொதுமக்கள் பொறுப்போடு செயல்படுவது அவசியம். பொது இடங்களில் மது அருந்துவது சட்டவிரோதமானது. ஆனால், இந்த விதிகளைப் பொருட்படுத்தாத சிலா் ஆறுகள், குளங்களில் மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை உடைத்து நீா்நிலைகளில் வீசிச் செல்கின்றனா். இதனால் நீா் அருந்த வரும் வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. இந்த மனநிலையை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com