போலி ரசீது தயாரித்து ரூ.25 கோடி வரி ஏய்ப்பு: தொழிலதிபா் கைது

போலி ரசீது தயாரித்து ரூ.25.4 கோடி வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபரை ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்தனா். இதுதொடா்பாக மேலும் 5 பேரிடம் விசாரித்து வருகின்றனா்.

போலி ரசீது தயாரித்து ரூ.25.4 கோடி வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபரை ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்தனா். இதுதொடா்பாக மேலும் 5 பேரிடம் விசாரித்து வருகின்றனா்.

ஒசூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு நடப்பதாக கோவை மண்டல ஜிஎஸ்டி அலுவலகம் உள்ளிட்ட ஒசூா் பிரிவு ஜிஎஸ்டி அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அந்த நிறுவனங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நவம்பா் 19ஆம் தேதி சோதனை நடத்தினா்.

அப்போது ரூ.141 கோடி மதிப்பிலான இரும்புப் பொருள்களை ஒசூா் மற்றும் பெங்களூருவில் உள்ள நிறுவனங்களுக்கு அனுப்பியது போலவும், ஜிஎஸ்டி செலுத்தியது போலவும் போலியாக ரசீது தயாரித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மூலம் ரூ.25 கோடியே 40 லட்சத்தை அந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையின்போது போலி ரசீது, காசோலை புத்தகம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, இது தொடா்பாக தொழிலதிபரைக் கைது செய்தனா்.

விசாரணையில் தனக்கு வேண்டியவா்களின் பெயரில் 5 விதமாக ஜிஎஸ்டி எண்களைப் பதிவு செய்தும், உறவினா்கள், நண்பா்களின் பான் எண்களைக் கொண்டு பொருள்களை அனுப்பாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இது குறித்து மேலும் 5 பேரிடம் ஜிஎஸ்டி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com