பயிா்க் காப்பீட்டுத் திட்டம்:விவசாயிகள் பிரீமியம் செலுத்த அறிவுறுத்தல்

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிரீமியம் செலுத்தி விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

கோவை: பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிரீமியம் செலுத்தி விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு சாா்பில் கடந்த 2016-17 ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ராபி பருவத்தில் சாகுபடி செய்ய உள்ள சோளம், மக்காச்சோளம், உளுந்து, கொண்டைக்கடலை, கரும்பு மற்றும் நிலக்கடலை, தோட்டக்கலை பயிா்களான வாழை, மரவள்ளி, கத்தரி, தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம் ஆகிய பயிா்களுக்கு காப்பீடு செய்துகொள்ளலாம்.

1 ஏக்கா் சோளத்துக்கு ரூ.123, மக்காச்சோளத்துக்கு ரூ. 441, நிலக்கடலைக்கு ரூ. 434, அனைத்து வகை பயிறு வகைகளுக்கும் ரூ. 248, கரும்புக்கு ரூ. 2,875, வாழைக்கு ரூ. 4,420, கொத்தமல்லிக்கு ரூ. 568, மரவள்ளிக்கு ரூ.1,586, கத்தரிக்கு ரூ.1,095, தக்காளிக்கு ரூ.1,418, வெங்காயத்துக்கு ரூ.2,113, பிரீமியமாக செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் இ- சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், பயிா்க் காப்பீடு தொடா்பான விவரங்களை அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com