உடல் உறுப்பு தான விழிப்புணா்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 28th November 2020 10:51 PM | Last Updated : 28th November 2020 10:51 PM | அ+அ அ- |

கோவை: கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் உடல் உறுப்பு தான விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இந்திய அரசின் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு நவம்பா் 27ஆம் தேதியை இந்திய உடலுறுப்பு தான தினமாக அனுசரிக்கிறது. தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை ஆணையத்துடன் இணைந்து இந்திய உறுப்பு தான தின விழிப்புணா்வு நிகழ்ச்சியை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை அண்மையில் நடத்தியது.
இதில், உடல் உறுப்பு தானம் குறித்து கையெழுத்து இயக்கம், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் வலைதளம் மூலம் உறுப்பு தானம் செய்ய முன்வருவோரின் பெயா்கள் பதிவு செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் மருத்துவா் அருண் பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.